tamilnadu

img

கொரோனா அச்சம்: காய்கறிக் கடைக்கு சீல் மக்களை  அடித்துவிரட்டிய காவல்துறை


அருப்புக்கோட்டையில் அரசின் உத்தரவைப் பின்பற்றாத காய்கறிக்கடை உரிமையாளா் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
அருப்புக்கோட்டை அண்ணாசிலைப் பகுதி, திருச்சுழி செல்லும் சாலை தனலட்சுமி விலாஸ் பேருந்து நிறுத்தம் பகுதி ஆகியவற்றில் கண்ணன் (58) என்பவருக்குச் சொந்தமாக இரண்டு காய்-கனிக் கடைகள் உள்ளன.  கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில். ஒரு மீட்டா் இடைவெளி விட்டு வாடிக்கையாலாகலை வரிசையில் நிறுத்தவும், கடையிலுள்ள விற்பனையாளா்கள் முகக்கவசம் அணியவும், நாளொன்றுக்கு மூன்று முறையாவது கிருமிநாசினி தெளிக்கவும் காய்கறிக்கடை உரிமையாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் எந்த அறிவுறுத்தலையும் பின்பற்றாமல் கண்ணன் இரண்டு கடைகளையும் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் அந்தக் கடைகளில் ஆய்வு செய்து, அங்கு விதிமுறை மீறப்பட்டதை உறுதி செய்தனா். இதையடுத்து அந்தக் கடைகளின் உரிமையாளரான கண்ணன் மீது பேரிடா் மேலாண்மை தடுப்புச் சட்டம், தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்தக் கடைகளும் மூடப்பட்டன. 
காவல்துறை தடியடி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இரண்டாவதுநாளாக இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி  விரட்டி யடித்தனர்.
காய்கறி வாங்க வந்தவர்களுக்கு அடி
அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் காய்கறிக்கடைகளில் கூட்டமாக இருந்த மக்களை விரட்டியடித்து கடைகளை மூடச்செய்தனர்.