சென்னை, ஜூன் 26- குவைத், சிங்கப்பூர், பக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக உலகத்தில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் இந்தியாவிற்குத் திரும்ப முடியாமல் கடும் அவ திக்குள்ளானார்கள். இந்நிலையில், கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் வெளி நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் அழைத்து வருகிறது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் மே7 ஆம் தேதி முதல் ஜூன் 24 தேதி வரை அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய், ஜப்பான், கொரியா, மியான்மர், மஸ்கட், பிலிப்பைன்ஸ் போன்ற 15 நாடுகளிலிருந்து 16 ஆயிரத்து 113 பேர் வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்ட வர்களில் கொரோனா தொற்று இல்லாதவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தனி மைப்படுத்தல் காலம் முடியாத வர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக் கப்படுகிறது. இதில் 135 பேர் குண மடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் முகாமில் தங்கி யிருந்தவர்களுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய் யப்பட்டது. இதில், குவைத்தி லிருந்து வந்தவர்களில் 13 பேர், பக்ரைனிலிருந்து வந்தவர்களில் ஐந்து பேர், சிங்கப்பூரிலிருந்து வந்தவர்களில் இரண்டு பேர் என 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து வெளிநாடுகளி லிருந்து வந்தவர்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 328 ஆக உயர்ந்தது. அதுபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு பல்வேறு நக ரங்களிலிருந்து 811 விமானங்க ளில் 49 ஆயிரத்து 805 பேர் வந்த னர். இவர்கள் அவர்களது வீடு களில் தனிமைப்படுத்தப்பட்டனர். உள்நாட்டு முனையத்தில் வந்தவர்களில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 99 ஆக உயர்ந்தது. இவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.