tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,789 பேருக்கு கொரோனா பாதிப்பு...  இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 99 பேர் பலி...   

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மக்கள் நெருக்கம் உள்ள சென்னை மண்டலத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அனைத்து மாவட்டங்களில் பரவலாக பரவி வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதியில் கொரோனா பரவல் வேகம் மின்னல் வேகத்தில் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 5,789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 99 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தி (4,034) கடந்துள்ளது. புதிய உச்சமாக ஒரே நாளில் 7,010 சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,966 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சிகிச்சையில் 56,738 பேர் உள்ளனர்.  மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்த நபர்களில் 57 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது