சென்னை, ஏப்.5- கொரோனாவால் பாதிக் கப்படுவோரில் 42 சதவிகி தம் 21 வயது முதல் 40 வய துள்ள இளைஞர்களாக இருப்பதால் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கை அறிக்கை வருமாறு:
மத்திய நல்வாழ்வுத் துறையின் கூட்டுச் செயலா ளர் அகர்வால் பத்திரிகை களிடம் கரோனா வைரஸ் (கோவிட் 19) இந்தியாவில் எப்படி, யாரை பாதிக்கிறது. எந்த வயது உள்ளவர்கள் என்பது பற்றிய புள்ளி விவ ரங்களைத் தந்துள்ளார். இது மிகவும் அதிர்ச்சிக்குரியதாக வும், அதேநேரத்தில் வேத னைக்கும், விசனத்திற்கும் உரியதாகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பாதிக்கப் பட்டவர்களில் 42 சதவிகிதத் தினர் 21 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட வர்கள் தான்.
கொரோனாவால் பாதிக் கப்பட்டோரில் 17 சதவிகிதம் பேர்தான் 60 வயதுக்கு மேற் பட்டவர்கள். அமெரிக்கா வோடு இதை ஒப்பிடும்போது 32 சதவிகிதம்தான். இந்தி யாவில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் 2,904 பேர். இதில் மரணமடைந்த வர்கள் 75 பேர்.மரணமடைந்த வர்களின் பட்டியலில் வயது பற்றிய தகவலை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை பகுத்து அளிக்கவில்லை.
கொரோனா தாக்குதல் 42 சதவிகிதத்தினர் 20 முதல் 40 வயதுள்ளவர்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலாக இருப்பதால்இளைஞர்களே, மிகவும் கவனமாக இதனைத் தடுக்க ஒத்துழையுங்கள். வயதானவர்களுக்குத் தான் வரும், நம்மை ஒன்றும் செய்யாது என்று நினைத்து ஊரடங்கை மீறி, வெளியே வருவது, இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி ‘ஜாலி ரைட்’ செய்யும் வீண் விப ரீத வேலைகளில் ஈடுபடா தீர்கள்.
அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர். சமூகப் பொறுப் புடன் நடந்து கொள்ளுங்கள். உங்களை நம்பியுள்ள உங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர்கள், நண்பர் கள் இவர்களைப் பற்றி யெல்லாம் ஒருகணம் சிந்தி யுங்கள். தன்னைக் காத்து, தான் சார்ந்த குடும்பத்தை யும், சமூகத்தையும் கரோனா வின் கோரப்பிடிக்குள் சிக்கா மல் காப்பாற்றிக் கொள்ளுங் கள்.
வாழ வேண்டியவர்கள். நீங்கள்! சாதிக்க வேண்டிய வர்கள் நீங்கள் என்பதை மற வாதீர். பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். தனிமை - தூய்மை - கட்டுப்பாடு கடை பிடியுங்கள். இவ்வாறு வீரமணி தெரி வித்திருக்கிறார்.