tamilnadu

img

இடுவாய் பாரதிபுரத்தில் சிஐடியு கொடியேற்று விழா

திருப்பூர், பிப். 17- இடுவாய் பாரதிபுரத்தில் சிஐடியு கொடியேற்று விழா ஞாயிறன்று நடைபெற்றது. திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி பாரதிபுரத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தில் புதிதாக 50 தொழி லாளர்கள் இணைந்தனர். இதைத் தொடர்ந்து சிஐடியு கொடியேற்று விழா ஞாயிறன்று நடைபெற்றது. செங் கொடியை சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லதுரை ஏற்றி வைத்துப்  பேசினார். இவ்விழாவுக்கு சுரேஷ் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் இடுவாய் கிளை செயலா ளர் கருப்புசாமி,  சீராணம்பாளையம் கிளைச் செயலாளர் க.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க உறுப்பி னர்களுக்கு உறுப்பினர் அட்டையை இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் க.கணேசன் வழங்கி வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் மாவட்ட  செயலாளர் சுப்பிரமணியம் சிறப்புரை ஆற்றினார். சிஐடியு விசைத்தறி சங்க மாநிலக்குழு உறுப் பினர் க.குமரவேல் நன்றி கூறினார்.  முன்னதாக பாரதிபுரம் பட்டத்தரசி அம்மன் கோயில் அருகில் இருந்து சங்க தலைவர்களுக்கு மேளதாளத்துடனும் பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மக்கள் வரவேற்பு

பாரதிபுரம் அங்காள பரமேஸ்வரி நகர் மக்கள் சார் பில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் கணேசன் வெற்றி  பெற்றதற்கு பாராட்டி அவருக்கு ஆரத்தி எடுத்து சால்வை கள் அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடி தெரு விளக்கு, குடிநீர், பேருந்து வசதி போன்ற பிரச்சனைகளுக்கு விரைந்து நட வடிக்கை எடுப்பதாக ஊராட்சிமன்ற தலைவர் க.கணேசன் உறுதியளித்தார்.