செங்கல்பட்டு, ஏப்.21- தாயாருக்கு மருந்து வாங்கச் சென்ற இளைஞரை சாதிய வன்மத்துடன் தாக்கிய காவல் உதவி ஆய்வாளரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாள ருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் வடப்பட்டிணம் கிராமத்தைச் சார்ந்த தலித் இளைஞர் மணிகண்டன் (20) தனது தாயாருக்கு மூட்டு வலி மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றுள் ளார். ஊரடங்கு காவல் பணியிலிருந்த காவலர்கள் மணிகண்டனை வழிமறித்து விசாரித்துள்ளனர். தாயாருக்கு மருந்து வாங்கச் செல்வதாகக் கூறியுள்ளார். இருப்பினும், காவலர்கள் அவரை பிவிசி பைப்பால் தாக்கியுள்ளனர். இதில் படு காயம் அடைந்த மணிகண்டன் சுருண்டு விழுந்துள்ளார்.
மயக்கமடைந்த மணிகண்டனைக் கூவத்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் ஆய்வாளர் சரவணனி டம் ஒப்படைத்துள்ளனர். உதவி ஆய்வா ளர் மணிகன்டனை நீ என்ன சாதி என்று கேட்டுள்ளார். மணிகண்டன் தலித் எனக் கூறியதும் ஆத்திரமடைந்ததோடு இழி வான வார்த்தைகளைக் கூறி சரமாரி யாகத் தாக்கியுள்ளார். இதில் வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்த மணிகண்டனை காவலர்கள் அவரது கிராமத்திற்கு அருகாமையில் சாலை யில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
சாலையில் கிடந்த சரவணன் குறித்து கிராம மக்கள் மணிகண்ட னின் தாயாருக்குத் தகவல் தெரி வித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் சரவணன் மீட்டு அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலை யத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மத்துவக் கல்லூரி மருத்து வமனைக்குக் கெண்டு செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி செங்கல்பட்டு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு சுயநினைவுக்கு வந்த பின்னர் நடந்ததை கூறியுள்ளார்.
இதுகுறித்து மணிகண்டனின் தாயார் ஜெயலட்சுமி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுத்துப் பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்து ஒருவார காலம் ஆகி யும் மணிகண்டனைத் தாக்கிய உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர் கள் மீது நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதை வன்மையாகக் கண்டிக் கின்றோம்.
மேலும், கூவத்தூர் உதவி ஆய்வா ளர் சரவணன் பாதிக்கப்பட்டு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் தொடர்ந்து சாதி ரீதியான அணுகுமுறை யுடன் தலித் மக்கள் மீது வன்மத்துடன் நடந்து கொள்வதும், தாக்குதல் நடத்துவ தாகவும் பொதுமக்கள் புகார் தெரி விக்கின்றனர்.
இப்பிரச்சனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு உதவி ஆய்வாளர் சரவணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன் பாதிக்கப்பட்டுள்ள மணி கண்டனுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரி வித்துள்ளார்.