சின்னாளபட்டி:
தமிழகத்தில் உள்ள மூன்று பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் கலைக்கல்லூரிகள் முக்குலத்தோர் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாக செயல்பட்டு வருகிறது.
இதில் விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல் லூர் கலைக்கல்லூரியும் ஒன்று. இந்தக்கல்லூரி ஐந்து ஆண்டுகளாக பிற மாநிலத்தவர்கள் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளின் கீழ் முக்குலத்தோர் அறக்கட்டளை (அகில இந்திய பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் கல்வியல் அறக்கட்டளை) என்ற பெயரில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இருபதுபேர் சின்னாளபட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது, குறித்து அகில இந்திய பிரமலை கள்ளர் கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் கூறுகையில், “கல்லூரி நிர்வாகத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் கொண்டுவர முயற்சி நடக்கிறது. பதவிக்காலம் முடிந்தும் பொறுப்பிலிருக்கும் நிர்வாகி ரமாதேவியை பதவி நீக்கம் செய்ய வேண் டும். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது என்றனர்.