சென்னை,ஜூன் 29- தமிழகத்தில் உள்ள 52 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள், முழு நேர முதல்வர்கள் இன்றி செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கல்வியியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 113 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 52 கல்லூரி களில் அதாவது சுமார் 46 சத வீதம் கல்லூரிகளில் முழுநேர முதல் வர்கள் இல்லை எனக் கூறப்படு கிறது. அதே போல் கல்லூரி களுக்கான இயக்குனரகத்தில், இயக்குனர் பணியிடமும் காலி யாக உள்ளது. இந்நிலையில், இந்த 52 கல்லூரி களிலும் பொறுப்பு முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அன்றாட பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வும், கல்லூரியின் வளர்ச்சி, தரம் உயர்த்துதல் போன்ற நடவ டிக்கைகளை முன்னெடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. அதே போல் கல்லூரிகளில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை களிலும், தற்காலிக முதல்வர்கள் தலையிடுவதில்லை எனவும், இதனால் அக்கல்லூரிகளின் வளர்ச்சியும், கல்வித்தரமும் பாதிக் கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.