சென்னை, மே 8- ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலி யர்கள் அடுத்த 6 மாத காலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை களுக்கு பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர் கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2 ஆயிரத்து 715 சுகா தார ஆய்வாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, 6 மாத காலத் திற்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2 ஆயிரத்து 570 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இந்த செவிலியர்கள், ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று நாட்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ள னர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்க ளும் பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.