லக்னோ,பிப்.19- இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஆக்ரா வில் யமுனை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்க்கிறார். இதனால் யமுனை நதியில் கூடுதல் தண்ணீரை உத்தரப் பிரதேச அரசு திறந்து விட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி வரும் டிரம்ப், ஆக்ராவுக்கு தனது மனைவி மெலனியாவுடன் செல்ல திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில் யமுனையில் சுற்றுச்சூழலை மேம் படுத்தும் வகையில் கூடுதல் தண்ணீரை உத்தரப்பிரதேச அரசு திறந்து விட்டுள்ளது. யமுனை நதி பகுதியில் வீசும் துர்நாற்றத்தை போக்கும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதாகவும், அந்த தண்ணீர் மதுராவை 20 ஆம் தேதியும், ஆக்ராவில் 21 ஆம் தேதியும் சென்றடையும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.