திருவனந்தபுரம், அக்.28- தேச நலன், மாநில நலன்களை கருத்தில் கொண்டு பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிட்டெட்) நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடு மாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார். இதுகுறித்து திங்களன்று சட்டமன்ற கூட்டத்தின் போது பிரனாயி விஜயன் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் கொள்கைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளை விற்க 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி ‘மகாரத்தினம்’ என்கிற ஆண்டு க்கு ரூ.5,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் நாட்டின் மிகப்பெரிய பெட்ரோலியம் கம்பெனிகளில் ஒன்றான பிபிசிஎல் நிறுவனத்தின் 53.29 சதவிகிதம் பங்குகளை தனி யாருக்கு விற்கும் முயற்சி நடக்கிறது. இது இங்கு பணியாற்றும் 30,000 க்கும் மேற்பட்டோரை கடுமையாக பாதிக்கும். கடந்த 5 ஆண்டுகளில் அரை லட்சம் கோடி ரூபாய் வைப்புத்தொகை வைத்துள்ள நிறுவனத்தை பொ துத்துறையில் பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டி பிரதமருக்கு 17.10.2019 அன்று கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
பிபிசிஎல்இன் பகுதியாக கொச்சியில் சுத்திகரிப்பு நிலையம் கேரள அரசின் முன்முயற்சியால் அமைக்கப் பட்டது. இதில் கேரள அரசுக்கு 5 சதவிகிதம் பங்கு இருந்தது. சுத்திகரிப்பு நிலையத்தை பிபிசிஎல் ஏற்றுக்கொண்ட போது மாநில அரசின் பங்கு நீடித்த நிலையில் இயக்கு நர் குழுவில் ஒரு இடமும் அளிக்கப்பட்டது. பிபிசிஎல்இன் வளர்ச்சியில் மாநில அரசு பொருளாதார அடிப்ப டையிலும், வேறு வகையிலும் உதவி செய்துள்ளது. இந்நிலையில் இந்த பொதுத்துறை நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி கடனாக வழங்க கேரள அரசு முடிவு செய்தது. இந்த உதவிகள் அனைத்தையும் மாநில அரசு செய்தது பொதுத்துறையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் வளர்ச்சியில் உள்ள அக்கறையால்தான். சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் பெரும் பெட்ரோ கெமிக்கல் பூங்கா அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மூலப்பொருட்களை சுத்தி கரிப்பு நிலையத்திலிருந்து பெற வேண்டும். பிபிசிஎல் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி ரூ.25,000 கோடி மதிப்பிலான கேரள அரசின் திட்டத்திற்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும். பிபிசிஎல் உடன் அரசு மேற் கொண்ட ஒப்பந்தத்தின்படி ரூ.4,500 கோடி கேஜிஎஸ்டி/வாட் மூலமும் ரூ.3,000 கோடி சிஎஸ்டி மூலமும் ரூ.750 கோடி டபிள்யு.டி.சி (ஒர்க் கான்ட்ராக்ட் டாஸ்க்) ரீ இம்பர்ஸ்மென்ட் மூலமும் 15 ஆண்டுகளில் வழங்க வேண்டும். தற்போது டபிள்யு.டி.சி ரீ இம்பர்ஸ்மென்ட் மூலம் ரூ.80 கோடியும், KGST/VAT (Deferred Loan) மூலம் ரூ.100 கோடியும் பிபிசிஎல்க்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.