tamilnadu

img

ஒரு கப் டீயில் 40 பேருக்கு பரவிய கொரோனா

குண்டூர்:
ஆந்திர மாநிலம் நரசராபேட்டையைச் சேர்ந்த 45 வயதான கேபிள் ஆபரேட்டருக்கு கொரோனா வைரஸ் பரப்பிய நபரை முழுமையான விசாரணைக்குப் பின் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
கேபிள் ஆப்பரேட்டருக்கு ஏற்கனவே காசநோய் நோய் இருந்துள்ளது. இதையடுத்து அவர்  நரசராபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஏப்ரல் 6- ஆம் தேதி அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை குண்டூர்  மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏப்ரல் 9- ஆம் தேதி அங்கு அவர் இறந்தார். ஏப்ரல் 10- ஆம் தேதி அவர் கொரோனா வைரஸால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கேபிள் ஆபரேட்டருக்கு கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்த புறநகர் காவல் கண்காணிப்பாளர் விஜயராவ் தனிப்படை ஒன்றை அமைத்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், குண்டூரைச் சேர்ந்த ஏழு பேர் தில்லி சென்று திரும்பியுள்ளனர்; அவர்களில் ஏழாவது நபர் தனது பெற்றோரைப் பார்க்க நாசராபேட்டையில் ஷாலோம் நகருக்கு வந்துள்ளார்; வழியில் பேருந்து நிலையத்தில் உள்ள கடையொன்றில் டீ குடித்துள்ளார்; அதே சமயம் அந்தக் கடைக்கு வந்த கேபிள் ஆபரேட்டரும் டீ குடித்துள்ளார்; அப்போது தான்  தில்லி சென்று வந்த நபர் மூலம் தொற்று பரவியது தெரியவந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாவது நபர் வியாழனன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கேபிள் டிவி ஆபரேட்டர் மூலம் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர், நண்பர் ஒருவர், குடும்ப உறுப்பினர்கள் மூலமாக 34 பேர். கேபிள் ஆபரேட்டரின் நண்பரின் மூலம் ஐந்து மருத்துவர் உட்பட 18 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.