tamilnadu

img

ஏழைத்தாயின் பிள்ளையே? எங்கள் குடிசை அவமானமா உனக்கு?

குடிசைகள் அவமானமா? நீங்கள் அவமானமா?

நீங்கள் 
இடிப்பதில் எக்ஸ்பர்ட்!
தெரியும் எங்களுக்கு

உங்களுக்கு 
கட்டவும் தெரியுமென்பதை 
டிரம்ப் வருகையால்தான் புரிந்துகொண்டோம்

பாகிஸ்தானுக்கும் 
இந்தியாவுக்கும் 
இடையில்தான் 
தடுப்புச் சுவர் 
எழுப்புவீர்களென 
எண்ணினோம்

எதிர்பாராத திருப்பமாக இந்தியாவுக்குள்ளேயே எழுப்பிவிட்டீர்கள்

ஏழைத்தாயின் 
பிள்ளையே?
எங்கள் குடிசை உனக்கு அவமானமா?

இந்தியாவின் அவமானங்கள் எவை?
இதோ!

ரஃபேல் விமானங்கள்
இந்தியாவின் அவமானம்

பாபர் மசூதி இடிப்பு
இந்தியாவின் அவமானம் 

பெஸ்ட் பேக்கரி 
கொலைகள்
இந்தியாவின் அவமானம் 

வங்கிகளை ஏமாற்றுபவர்கள்
இந்தியாவின் அவமானம்

ஊழல் லஞ்சம் 
இந்தியாவின் அவமானம்

வறுமை பசி 
இந்தியாவின் அவமானம்

படித்தவர்களை 
பகோடா போடச்சொல்வது அவமானம்

நீங்களோ 
குடிசைகளை அவமானமாகக் கருதுகிறீர்கள்

நாடு கடந்து வலசை வருகின்ற 
பறவைகள் 
அம்பானி வீட்டு 
ஐம்பதாவது மாடியில் 
மோதி உயிர்விடுகின்றனவே
அது அவமானம்

அமெரிக்க அதிபர் 
வருகையின்போது
இந்தியக் குடிமக்களுக்கு
சொந்தக் குடிசைகளே சிறையாகிவிடுகிறதோ

எங்கள் 
குடிசைகளைப் போலவே 
அரைநிர்வாணமாக நிற்கும் காந்தியைப் பார்த்துகூட 
அமெரிக்க அதிபருக்கு
கண் கூசலாம்

அவர் சிலைகளை மறைத்தும் 
நீங்கள் தடுப்புச்சுவர் 
கட்ட வேண்டியிருக்கும்

அடுத்தமுறை ரஷ்ய பிரதமர் வாரணாசி வந்தால் 
கங்கைக்கரை 
அம்மணக் கூட்டம்
அகோரிகளைச் சுற்றி 
சுவர் எழுப்புவீர்களா?

இல்லை இந்த அம்மணமே இந்தியாவின் பாரம்பரியமென பம்முவீர்களா?

பாலிவுட் நாயகியரின் அரை நிர்வாணமோ சங்கராச்சாரிகளின் வெற்றுடம்போ ஆபாசமில்லையா?

ஏழை குடிசைகள் 
ஏழைகளின் வெற்றுடம்பு
நடுவீதியில் திறந்துகிடக்கும்
அவர்கள் வாழ்வு எல்லாம்
உங்களுக்கு அவமானம்

மசூதியை இடிக்கக் கூப்பிட்டபோது இந்துவாக இருந்தோமே...... இன்று டிரம்ப் வரும்போது ஏழைகளாகத் தெரிகிறோமா?

ஓட்டுப் போடும்போது
இந்தியர்களாக இருந்தோமே......
அமெரிக்க அதிபர் வரும்போது
ஏழைகளாகத் தெரிகிறோமா?

எங்களுக்காவது 
குடிசை இருக்கிறது!

உங்களது 
அருகிலிருப்போருக்கோ
மானமில்லை
ஈனமில்லை
ஈரமில்லை
நெஞ்சில் 
நேர்மையில்லை

எங்கள் குடிசைகளுக்கு வெளியேதான் நீங்கள் இருக்கிறீர்கள்

அமெரிக்கா இருக்கிறது

ராணுவம் கோர்ட் 
போலீஸ் இருக்கிறது

எல்லாவற்றுக்கும் மேலாக 
உங்கள் 
எம்.பி க்கள்
பாராளுமன்றம்
ஜனாதிபதி எல்லாம் 
எங்கள் குடிசைக்கு வெளியே இருக்கிறார்கள்.

உங்கள் குடியுரிமைச் சட்டத்தில் 
ஒரே ஒரு சின்ன சந்தேகம்........

'இனி குடிசை வாசிகள் யாரும் இந்தியர்கள் அல்லவா????
சொல்லுங்கள்.....
பிறகு, 

டிரம்புக்கு நீங்கள் 
அம்பானி வீட்டைக் காட்டலாம்

பட்டேல் சிலையைக் காட்டலாம்

விஜயமல்லையாவின் கிங்ஃபிஷர் 
கம்பெனியைக் காட்டலாம்.

~முகநூலில் கரிகாலன். ஆர்