tamilnadu

img

கோத்ரா வழக்கு குற்றவாளிக்கு பாஜக சீட்

அகமதாபாத், ஏப்.4- குஜராத் மாநிலம் ஆனந்த் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக மிடேஷ் படேல் (54)என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். பருப்பு வியாபாரியாகவும், மாவட்டபாஜக பொருளாளராகவும் இருக்கும் மிடேஷ் படேல், 2002-ஆம் ஆண்டு,குஜராத்தில் முஸ்லிம் களுக்கு எதிராக நடை பெற்ற வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார். இதுதொடர்பான வழக்குகள் தற்போதும் மிடேஷ் மீது நிலுவையில் இருக்கின்றன.