tamilnadu

img

கோவா மாநிலத்தில் புதிய முதல்வர்

கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று முன் தினம் காலமானார். இதையடுத்து புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. 


இதற்கிடையில் 15 உறுப்பினர்கள் கொண்ட தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனால் கோவா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவியது. 


இதையடுத்து அமித்ஷா தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கோவா சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த்தை புதிய முதல்வராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.