tamilnadu

img

தில்லி ரபடா விலகல் சிக்கலில் தில்லி அணி

கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தில்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திரபந்துவீச்சாளர் ககிசோ ரபடா முதுகு வலியால் தாய்நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரபடா நடப்பு ஐபிஎல் சீசனில் 25 விக்கெட்டுகளை (12 ஆட்டங்களில்) வீழ்த்திஅதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.குறிப்பாகத் தில்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கிய பங்காற்றியவர் ரபடா தான்.முதுகு வலி சரியான பின்னர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்காக ரபடா தயாராக இருந்த பொழுதிலும் உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு உடனடியாக நாடு திரும்புமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அதிரடி உத்தரவிட்டது. இதன் காரணமாக ரபடா உடனடியாக தாய்நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார். ரபடாவின் திடீர் விலகலால் தில்லி அணி வீரர்கள், நிர்வாகம், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.