ஊக்க மருந்து விவகாரம்
நாட்டின் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பான நாடா விளையாட்டு வீரர் - வீராங்கனை கள் 5 பேருக்கு ஊக்க மருந்து சோதனை மூலம் 4 ஆண்டு தடை விதித்து இந்திய விளையாட்டு துறைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கட்லு ரவிக்குமார் (பளுதூக்குதல்), பூர்ணிமா பாண்டே (பளுதூக்குதல்), குர்மெய்ல் சிங் (பளுதூக்குதல்), தரம்ராஜ் யாதவ் (வட்டு எறிதல்), சஞ்ஜித் (ஓட்டப்பந்தயம்) ஆகியோருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போதைய நவீன விளையாட்டு உலகில் 5 பேருக்கு ஒரே சமயத்தில் ஊக்க மருந்து பிரச்சனை தொடர்பாகத் தடை வைத்திருப்பது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.