ஈரோடு, ஜூன் 11- ஈரோட்டில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ஈரோட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகை யில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் முதல் முறையாக சென்றால் ரூ.100, இரண்டாது முறையாக சென்றால் ரூ.500 அப ராதம், 3 வது முறையாக சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களை மாநகராட்சி அலுவ லர்கள் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். மாநகராட்சியில் தினசரி 100 முதல் 200 பேர் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட் சியில் இதுவரை 6 ஆயிரத்து 500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ. 6.50 லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.