tamilnadu

img

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி பிஎஸ்என்எல் ஊழியர்கள் இரண்டாம் நாளாக உண்ணாவிரதம்

ஈரோடு, ஜூலை  3- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடன டியாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு  தொலை தொடர்பு ஒப்பந்த தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் இரண்டா வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கண்ணுச்சாமி, ஒப்பந்த தொழி லாளர்கள் சங்கத்தின் எம்.சையது இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித் தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் மாநில உதவிச் செயலாளர் வி. மணியன் உண்ணாவிரதத்தை துவக்கி பேசினார். சங்கத்தின் மாநில செயலாளர் பாபு ராதா கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.  இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி. மணி, ஒப்பந்த தொழிலாளர்கள்  சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. பழனிச்சாமி, ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மாநில அமைப்புச் செயலர் சி. பரமசிவம், மாநில உதவி செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் ராஜமாணிக் கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் புதனன்று இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத் திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டி.பாஸ் கரன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பருதி வேல் ஆகியோர் தலைமை வகித்த னர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன், மாவட்ட உதவி செயலாளர் ஏ.தங்கவேல், மாவட்ட உதவிதலைவர் வி.ராஜ்குமார், மாவட்டபொருளாளர் என்.ரமேஷ், ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பி.ஸ்ரீ்ரீதரன் மாவட்ட செயலாளர் எம்.செளந்த ரராஜன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்
திருச்செங்கோடு பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்திற்கு பிஎஸ்என் எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.விஜயன் தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கே.ராஜன் முன்னிலை வகித்தார். பிஎஸ்என் எல் ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.தமிழ்மணி, மாவட் டச் செயலாளர் இ.கோபால், ஒப் பந்த ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் எம்.செல்வம், மாவட்ட உத விச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமான தொழி லாளர்கள் பங்கேற்றனர்