tamilnadu

img

சாலை பாதுகாப்பு வார விழா: விழிப்புணர்வு பேரணி

கோபி, ஜன. 27- சாலைபாதுகாப்பு வார விழா வையொட்டி கோபிசெட்டிபாளை யம் போக்குவரத்து காவல்துறை யின் சார்பில் ஞாயிறன்று இரண்டு  மற்றும் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தமிழகத்தில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன் னிட்டு கடந்த ஜன. 20ஆம் தேதி  முதல் ஜன.27ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு பேரணிகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், கருத்தரங்கு, மருத்துவ முகாம்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் 31-வது சாலைபாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது. இதில் சாலைபாதுகாப்பு குறித்தும், சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தியும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும்,  வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் 2, 3 சக்கர வாகனப் பேரணி  நடைபெற்றது. இப்பேரணியா னது கரட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி நாயக்கன் காடுபுதுப்பா ளையம் வழியாக கோபிசெட்டிபா ளையம் பேருந்துநிலையத்தை வந்தடைந்தது.  கோபிசெட்டிபாளையம் உட் கோட்ட காவல் துணைக்கண்கா ணிப்பாளர் தங்கவேல், ஆய்வா ளர் சோமசுந்தரம், உதவி ஆய்வா ளர் பன்னீர்செல்வம், போக்கு வரத்து உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் காவலர் கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.
சேலம்
இதேபோல் சேலம் மாவட் டத்தில் மேற்கு வட்டார போக்கு வரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேர ணியை சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையர் செந்தில்  மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத் தனர். இதில், போக்குவரத்து துணை ஆணையர் சத்திய மூர்த்தி,  வட்டார போக்குவரத்து அதிகாரி கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு இருசக் கர வாகன ஓட்டிகள் தலைக வசம் அணிந்தவாறும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இருக்கை பட்டை அணிந்தவாறும் சென்று  பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.  இதனையடுத்து, சேலம் மேற்கு  வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் துவங்கிய இந்த விழிப்பு ணர்வு பேரணியானது, ஏவிஆர்  சுற்று வளைப்பு, கொண்டலாம் பட்டி தேசிய நெடுஞ்சாலை வழி யாக சென்று மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது.