கோபி, ஜூலை 15- சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் பகுதி நெடுஞ் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு, குழியில் சிக்கி வாகனங் கள் விபத்திற்குள்ளாவதால் அச்சாலையை சீரமைக்க வேண் டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையில் பெய்த கன மழையால் சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் பகுதி தேசிய நெடுஞ்சாலை, சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இந்நிலை யில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து பொள்ளாச் சிக்கு தேங்காய் மட்டை ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஆசனூர் அருகே வந்தபோது லாரி சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளாகி யது. இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் வாகனங்கள் விபத் திற்குள்ளாவது தொடர்கதையாகி வரும் நிலையில், குண் டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க நெடுஞ் சாலைத்துறை உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டு மென ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.