tamilnadu

ரேசன் கடையில் இலவச  முக கவசங்கள் வழங்க கோரிக்கை

ஈரோடு, மார்ச் 15- கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்க ளுக்கு ரேசன் கடைகளில் முக கவசங்களை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரசார் ஈரோடு ரயில் நிலை யத்தில் பயணிகளுக்கு முக கவசம் வழங்கினர். இந்நிகழ்ச் சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் தலைவர் யுவராஜா தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவும் நிலையில் 2 ரூபாய்க்கு விற்கப்படும் முககவசங்கள், தற்போது 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், ரேசன் கடைகளில் முககவசங்களை பொது மக்களுக்கு இலவசமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இலவசமாக கொரோனா வைரஸ் ரத்த பரிசோதனை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.