tamilnadu

img

கோபி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலி-பொதுமக்கள் அச்சம்

கோபி, பிப். 2- கோபிசெட்டிபாளையம் அருகே ஆட்டை சிறுத்தை  கொன்றதால் அப்பகுதி விவசா யிகள் அச்சமடைந்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வன சரகத்திற்குட்பட்ட வனப்பகுதி யில் யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. இவ்வ னவிலங்குகள் அடிக்கடி மலையடி வாரத்தில் உள்ள விவசாயத் தோட் டங்களில் புகுந்து சேதத்தை ஏற்பத்தி வருவதுடன், சிறுத்தை கரடி உள்ளிட்ட மாமிச உண்ணி விலங்குகள் விவசாயப் பட்டிக ளில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட  கால்நடைகளை தாக்கிக் கொன்று  உணவாக்கி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில்  கடந்த  மூன்று நாட்களாக கொங்கர்பா ளையம், மோதூர் பகுதியில் சிறுத் தையின் புகுந்து வேட்டையாடி வருகிறது. தாசப்பகவுடண்புதூர் ரவீந்திரன் என்ற விவசாயி தோட் டத்தில் புகுந்த சிறுத்தை தோட் டத்திலிருந்த ஆட்டைக் கடித்து இழுத்துச் சென்று அருகில் உள்ள  வாழைத்தோட்டத்தில் போட் டுள்ளது.  இதனைத்தொடர்ந்து, அப்ப குதி விவசாயிகள் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்து றையினர் மீதம் இருந்த ஆட்டின் பாகங்களை சேகரித்தும், கால்  தடங்களை சேகரித்தும் விசா ரணை மேற்கொண்டனர். கடந்த  மூன்று நாட்களாக மலையடி வாரத்தில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை புகுந்து ஆடுகளை கொன்று வரும் நிலையில், தற் போது வனத்தைவிட்டு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரவீந்தி ரன் தோட்டத்திற்கு சிறுத்தை  வந்துள்ளது. அப்பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பன்றிகளினால் விவசாய  பயிர்கள் அதிகளவு சேதம் ஏற் பட்டு வந்த நிலையில், தற்போது  சிறுத்தையினால் கால்நடைக ளையும் இழக்க நேரிடுவதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆடுகளை கொன்று வரும் சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு அதை பிடிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள் ளனர்.  இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த மூன்று நாட்க ளாக சிறுத்தையின் நடமாட்டத் தைக் கண்காணித்து வருவதா கவும், வனத்தை ஒட்டியுள்ள பகுதி யில் கூண்டு வைக்கப்பட்டுள்ள தாகவும், தானியங்கி கேமராக் கள் வைத்து தொடர்ந்து கண்கா ணித்து சிறுத்தையை பிடிக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.