கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளதால், கூடுதலான மின் கட்டணத்தை கொரோனா கால நிவாரணமாக தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி ஈரோட்டில் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் இயக்கம் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாரிமுத்து, ஜி.பழனிசாமி, பரம சிவம், ஆர்.கோமதி, சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்று சுமார் 3 ஆயிரம் மனுக்களை ஈரோடு தலைமை பொறியாளரிடம் வழங்கினர்.