கோபி, பிப். 2- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள் ளியில் சனியன்று நடைபெற்ற பவள விழாவில் பங்கேற்ற விஞ் ஞானி மயில்சாமி அண்ணாதுரை வாழ்வில் உயர கல்வி ஒன்றே தீர்வு எனக் குறிப்பிட்டார். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி ஆரம்பிக்கப் பட்டு 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக பள்ளியின் ஆண்டு விழாவை பவளவிழாவாகக் கொண்டாடினர். இந்த பவளவிழா நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று சிறப் புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மாட்டுக்கொட்டகை யில் தான் தன்னுடைய முதல் வகுப்பு படிப்பு தொடங்கியது. செவ்வாய் கிரகத்திற்க்கு விண்கலம் அனுப் பியதில் அமெரிக்க ஐந்தாவது முயற்சியிலும், ரஷ்யா 9வது முயற்சி யிலும், சீனாவும், ஜப்பானும் இது வரை வெற்றிபெறவில்லை. ஆனால் நாம் எடுத்த முதல் முயற் சியிலேயே ஒன்பதே மாதங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நீங்கள் வாழ்வில் உயர்வடைய அனைவரையும் மதிக்கவும், உல களாவிய கருத்துகளை நன்கு தெரிந்து கொள்ளவும் வேண்டும். அதற்கு கல்வி ஒன்றே தீர்வாகும் என்று பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு தன்னம்பிக்கையை ஏற்ப டுத்தினார். இதனைத்தொடர்ந்து சிறந்த மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் களுக்கும், பள்ளியை மேம்படுத்த நிதியுதவி அளித்த அனைவருக்கும் சிறப்புப் பரிசுகளை வழங்கி பாராட் டினார். இவ்விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன், ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயின்ற முன் னாள் மாணவர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.