புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு, உயிரைக் கொல்லும். புற்று நோயை உண்டாக்கும். இந்தியாவில் புகை பழக்கத்தால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் மரணமடைவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் எச் சரிக்கை படங்களுடன்புகையிலை பொருட்கள் விற்பனைக்கு அனுமதிக் கப்பட்டு்ள்ளது. கார்ப்பரேட்டுகளால் நடத் தப்படும் சிகரெட் கம்பெனிகள் ஒரு புறம் இருக்க தமிழகத்தில் திருநெல் வேலி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங் களில் பீடி தொழிலை நம்பி பல்லாயி ரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இதில் கணிசமானோர் நெல்லை மாவட்டத்தில் இருந் தாலும், ஈரோடு மாவட்டத்திலும் நான்கு பீடி கம்பெனிகள் உள்ளன. இதில் 99 விழுக்காட்டினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட் கொல்லியான கொரோனா அச்சுறுத் தலால் மூன்றாவது முறையாக மே17 வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இக்காலத்தில் சில அவ சிய தேவைகளை முன்னிட்டு கொ ரோனா பரவல் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சிவப்பு மண்ட லமாக இருந்த நிலையில் இரண்டா வது, மூன்றாவது கட்டங்களாக ஊர டங்கு தொடரும் நிலையில் பச்சை மண்டலத்திற்கு மாறியுள்ளது. இச்சூழலில் மற்ற தொழில்களைப் போல பீடி தொழிலும் முடக்கப்பட் டுள்ளது. பீடி உற்பத்தி என்பது ஆலை யில் கூட்டமாகச் செய்யும் தொழில் அல்ல. ஊரக பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட கிளைகளில் தொழிலா ளர்களுக்கு பீடி தயாரிப்புக்கான புகை யிலைத் தூளும், பீடி இலைகளும் கொடுக்கப்படும். அதனைப் பெற்ற தொழிலாளர்கள் அவரவர் வீடுக ளிலேயே பீடி சுற்றும் பணியை மேற் கொள்வர். இப்பணியில் ஈடுபட்டுள் ளவர்கள் 95 சதவிகிதம் பேர் பெண் களே ஆவார்கள். தங்கள் வீடுகளி லேயே இருந்து இப்பணியை மேற் கொள்வது விலகியிருப்பதும், சமூக இடைவெளியைப் பராமரிப்பதும் நூறு விழுக்காடு சாத்தியமானதே.
அதேநேரம், பீடி நிறுவனங்களின் தலைமையகங்கள் ஈரோட்டில் இருப் பதால் மூலப்பொருட்களை கிளை களுக்கு அனுப்புவதும், கிளைகள் மூலம் சுற்றப்பட்ட பீடிகளை பெற்று கொண்டு வருவதும், விற்பனைக்கு அனுப்புவதும் மிக முக்கியமான பணி யாகும். இப்பணியைச் செய்வதற்கு சரக்கு வாகனப் போக்குவரத்து செயல்பட வேண்டும். ஆனால், இப்போக்குவரத்து முடக்கப் பட்டுள்ளதால் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். தொழில் முடக்கத்தால் கடந்த 50 நாட்களாக கிடைத்து வந்த சொற்பக் கூலியையும் இழந்து மிகக் கடுமையான துயரத்தில் உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களில் ஒருவரான கைபானி என்பவர் கூறியதாவது, தொழில் இல் லாததால் ரொம்ப கஷ்டத்தில் இருக் கிறோம். குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டிற்கே சிரமப் படுகிறோம். வாரத்திற்கு குடும்ப செல வினங்களுக்கு ரூ.3 ஆயிரம் தேவைப் படும். இதுதவிர வீட்டு வாடகை, கரண்ட் பில் மற்றும் கல்வி செலவிற்கு வழியில்லை.
கடன் கேட்டாலும் எவரும் கொடுப்பதில்லை. ஆண் களுக்கும் வருமானமில்லை. ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசிற்கு 45 நாட்கள் வேலை இல்லை என்றால் எவ்வளவு சிரமம் என தெரியாதா? ரேசன் பொருட்கள் மட்டும் போதுமா? மற்ற மளிகை பொருட்கள் வேண் டாமா? ஆலை உரிமையாளர் களிடமும் கேட்க முடியவில்லை. கட்சிக்காரங்க மூன்று முறை அரிசி, காய்கறி கொண்டு வந்து கொடுத் தார்கள். இந்நிலையில் பள்ளி திறந் தால் என்ன செய்வது எனத் தெரிய வில்லை என்றார். ஷாஜாதி என்பவர் கூறுகையில், சாப்பாட்டிற்கு கஷ்டமாக உள்ளது. விலைவாசியும் உயர்ந்துள்ளது. எதுவும் வாங்க முடியவில்லை. எனது கணவர் பெயின்ட்டர். அவருக்கும் வேலை இல்லை. இரண்டு குழந்தை கள் உள்ளனர். வாரத்திற்கு 5000 பீடி சுற்றுவோம். ரூ.1100 வரை கூலி கிடைக்கும். இதனை வைத்து வாழப் பழகிவிட்டோம்.
ஊரடங்கிற்குப் பிறகு கம்பெனியிலிருந்து இரண்டு வாரங்கள் ரூ.1000 கொடுத்தனர். அதன் பிறகு கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. ரேசன் அரிசி வாங்கித்தான் சாப்பிட்டு வருகி றோம். அதுவும் போதுமானதாக இல்லை. ஆயிரம் வாங்கிய அடுத்த நிமிடமே செலவாகி விட்டது. மேலும் கடனாக ரூ.3 ஆயிரம் வாங்கி விட்டோம். அதற்கு மேல் கொடுப் ப்பதற்கும் ஆள் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார். இச்சூழலில், மூன்றாவது கட்ட ஊரடங்கு காலத்தில் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் ஊரக பகுதிகளில் உள்ள தொழில்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில் மூலப் பொருட்கள் கொண்டு செல்ல வும், உற்பத்தி செய்யப்பட்ட பீடி களைத் திருப்பி எடுத்து வரவும் அனு மதி மறுக்கப்படுகிறது. அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்தும் ஆட்சியாளர் கள் பெண் தொழிலாளர்கள் படும் அவதியைப் போக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்! எஸ்.சக்திவேல்.