கோபி, ஜூன் 27- கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் கள்ள நோட் டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆயிபாளையத்தில் செவ்வாயன்று இரு நபர்கள் அங் குள்ள காய்கறிக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர்.
அக்கடை உரிமை யாளர் அந்த நோட்டினை கள்ளநோட்டு என கண்டுபி டித்ததும் அந்நபர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர். இதனை யடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களைப் பிடித்து நம்பியூர் காவல் துறையினரிம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த பிரபு (28) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதி யைச் சேர்ந்த அழகுதுரை என தெரியவந்தது.
மேலும், இதில் சம்பந்தப்பட்ட கண்ணியப்பன் மற்றும் பாக்கியராஜ் ஆகிய மேலும் இருவர் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர். மேற்படி நான்கு நபர்களும் திருப்பூர் மாவட்டம், பூலுவப் பட்டி பாலன்நகரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த 4 பேரையும் கோபி நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.56 ஆயிரம் கள்ளநோட்டுகள், கணினி மற்றும் பிரிண்டர் இயந்திரம் ஆகியவற்றை பறிமு தல் செய்தனர்.