கோபி, ஜன.22- இயற்கை வேளாண்மை குறித்தும், இயற்கையை நேசிக்க வலியுறுத்தியும் தருமபுரி மாவட்டம் புவிதம் பள்ளி மாணவ, மாணவிகள் மிதிவண்டிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான புவிதம் பள்ளியில் 85 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 8ஆம் வகுப்புவரை உள்ள இப்பள் ளியில் இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளித்து வருவதுடன் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிது நிலம் ஒதுக்கி அதில் அவர்களே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளின் பயன்கள் குறித்தும் மாண வர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மாண வர்களுக்கு மிதிவண்டிப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ள னர். இப்பயணமானது தருமபுரியில் தொடங்கி மேட்டுப்பா ளையம் வரை செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. இதில் 15 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று மிதிவண்டிப் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இப்பயணமானது புதனன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விவசாயி அருணாசலத்தின் தோட்டத்திற்கு வந்தது. அங்கு மாணவ, மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை யம் குறித்தும், இயற்கை வேளாண்மைக்கு தேவை யான மூலப்பொருட்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக் கப்பட்டது. மேலும் பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகள் பராமரிப்பும், குதிரை பாராமரிப்பும், ஆடுகள் வளர்ப்பும், அதிலிருந்து கிடைக்கும் கழிவுகளை கொண்டு மீன் வளர்ப்பு போன்றவைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இப்பயணம் குறித்து மாணவர்கள் பேசுகையில், தங்க ளது மிதிவண்டிப் பயண நோக்கமானது இயற்கை குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். மேலும் இயற்கையை மனித அழிவிலிருந்து மீட்டெடுக்க இப்பயணத்தை மிதி வண்டியில் ஆரம்பித்துள்ளதாகம், இப்பயணம் மேட்டுப் பாளையம் வரை சென்று விவசாயிகளை சந்தித்து பல்வேறு தகவல்களை சேகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.