தஞ்சாவூர்: பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க வலியுறுத்தி இந்திய விமானப் படை வீரர்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர். இக்குழுவினர் மங்களூர் தொடங்கிக் கண்ணூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பயணம் செய்தனர். இதில் செவ்வாய்க்கிழமை தஞ்சை விமானப்படை நிலையத்திற்கு வந்த வீரர்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும், விழிப்புணர்வு துண்டறிக்கைகளையும் வழங்கினர். இக்குழுவினரைத் தஞ்சை விமானப்படை நிலையத் தளபதி வி.எம்.பிரஜூல்சிங் வழியனுப்பி வைத்தார்.