tamilnadu

img

உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பயணம்

சென்னை, நவ.15- பிரபல இருசக்கர வாகன சாதனை யாளரும், சாகசக்காரரும், வெல்மேனின் உல களாவிய பிராண்ட் தூதருமான கரோலிஸ் மிலியாஸ்கஸ், ஆண்களின்  ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தி யாவுக்கு வருகை  தந்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் உள்ள ஆண்கள், தங்கள் சமூக வட்டத்துக்குள் தங்க ளின்  உடல்நலப் பிரச்சனைகள் குறித்த ஆலோ சனைகளைக் கேட்க குறைந்த நேரத்தையே செலவிடுகிறார்கள்.   அவர்களின் உடல்நலப்  பிரச்சனைகளைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கி வைத்துள்ளனர். மேலும் தங்க ளின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவற்றை உடனடியாகச் செய் யாமல்  காலம் கடத்துக்கிறார்கள் என்றார். தனது சமீபத்திய இந்திய பயணத் தின்போது   மாறிவரும் வாழ்க்கை முறைகள்  மற்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் அதிரித்து வரும் நிகழ்வுகளைப்  பற்றி இளைஞர்களோடு விவாதித்ததாகவும் அவர் கூறினார்.