ஈரோடு, ஜூன் 15- நெல்லையில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்க தலைவர் அசோக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோடு மற்றும் அன் னூரில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் நெல்லை மாவட்ட பொரு ளாளரான அசோக், சாதிய ஆதிக்க சக்திகளால் கடந்த புதனன்று இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட் டார். முன்னதாக காவல் நிலையத் தில் ஆதிக்க வெறியர்கள் மீது அவர் புகார் செய்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் சமூக விரோதிகள் இந்த கொடூர படுகொலையை அரங்கேற்றியுள் ளனர். இந்த படுகொலை சம்பவம் மற்றும் காவல்துறையின் அலட்சி யத்தை கண்டித்தும் ஈரோடு மாவட் டம், பெருந்துறை பேருந்து நிலை யம் அருகே கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இப்போராட்டத் திற்கு சங்கத்தின் தாலுகா செயலா ளர் சி.அஜித்குமார் தலைமை வகித் தார். மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வ நாதன், முன்னாள் மாவட்ட தலை வர் ஜி.பழனிச்சாமி, தாலுகா கமிட்டி உறுப்பினர் வாசுதேவன் மற்றும் சிஐடியு மாவட்ட துணை தலைவர் கே.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடம்பூர் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங் கத்தின் மாநில தலைவர் எம். சடைய லிங்கம் தலைமை வகித்தார். சிபிஎம் மலை வட்டார கமிட்டி செயலாளர் சி.துரைசாமி, மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மழை வட்டார செய லாளர் சின்னசாமி, மாணவர் சங்க நிர்வாகி ர.பிரபு மற்றும் ராமராஜ், சிவலிங்கம், சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
அன்னூர்
கோவை மாவட்டம், அன்னூர் பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத் தின் அன்னூர் ஒன்றிய தலைவர் அர்ஜுன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் மணி கண்டன், ஒன்றியத் தலைவர் சர வணன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் வாலிபர் சங்கத்தின் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கார்த்திக், காளி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கபீர், சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.