கோபி, ஜூன் 25- ஈரோட்டில் விதிமுறை களை கடைபிடிக்காத 15 சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற் றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியா ளர்கள் சந்திப்பில் தெரிவித் துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை குளத்தில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத் தப்படும் மறு புனரமைப்புப் பணிகளை துவக்கி வைத்த சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், விதிமுறைகளை மீறும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் விதிமுறை களை கடைபிடிக்காத 15 சாய ஆலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உற்பத்தியை நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் கொரோனா மருத்துவ கழிவு கள் அகற்ற முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குடிமராமத்துப் பணி கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து குளங்கள் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வாய்க்கால்கள் கான்கி ரீட் தளங்களாக மாற்றும் செய்யப்பட்டுள் ளதென தெரிவித்தார். முன்னதாக, பாலப்பாளையம் பகுதியில் செல்லும் கழிவுநீர் ஓடையின் குறுக்கே ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டு வதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ் வின் போது கோட்டாட்சியர் ஜெயராமன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.