ஈரோடு,செப்.19- கடும் பணி நெருக்கடி வழங்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோட் டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத் தில் ஈடுபடும் வளர்ச்சித் துறை அலு வலர்களுக்கு பணி நெருக்கடி தரு வதும், உண்மைக்கு மாறான புள்ளி விபரங்களை வழங்க கேட்பது மற் றும் ஊழியர்களை அவமதிக்கும் செயல்களை கைவிட வேண்டும். ஜல் சக்தி அபியான் திட்ட பணி மேற் கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும். குடிமராமத்து பணியில் உள்ள அரசியல் நெருக்கடியை தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி தேர் தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் பா.ரவிச்சந் திரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கி.துளசிமணி, மாவட்ட செயலாளர் ச.சிவசங்கர், மாநில துணைத் தலைவர் ஜெ.பாஸ் கர்பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு முழக்கங் களை எழுப்பினர்.