tamilnadu

img

ஒரே பியானோவை 88 சிறுவர்கள் இசைத்து உலக சாதனை!

இங்கிலாந்தில் ஒரே பியானோவை 88 சிறுவர்கள் இணைந்து ஒரே நேரத்தில் இசைத்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்தில், பிரபல ஓவியர் லியானர்டோ டாவின்சியின் 500வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, பர்மிங்ஹாமில் உள்ள சர்வதேச மாநாடு மண்டபத்தில் நிகழ்வு ஒன்று நடந்தது. இந்த நிகழ்விற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், 88 பேர் இசைக்கும் வகையில் ஒரு பியானோவை சில சிறப்பம்சங்களுடன் வடிவமைத்தனர். 

இந்த நிகழ்வில், 6 முதல் 14 வயதுடைய 88 சிறுவர்கள் இணைந்து ஒரே நேரத்தில் இந்த பியானோவை இசைத்து சாதனையை நிகழ்த்தினர். இது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 66 பேர் ஒரே பியானோவை இசைத்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.