மத்திய-மாநில அரசுகள், துப்புரவுப் பணியா ளர்களை கௌரவிக்கி றோம் என்று சொல்லிக் கொண்டு “தூய்மைப் பணியாளர்” என்று பெயரை மாற்றுகின்றன. கரங்களைத் தட்டி விளக்கு ஏற்றி பாதை பூஜை யும் செய்கின்றன. ஆனால், தற்போதைய கொரோனா பேரிடர் காலத்திலும் சரி; சமூ கத்தில் சுகாதாரம் காக்கவும் சரி மருத்துவ பணிக்கு நிகராக களத்தில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை சமூகமும் அரசும் எப்படி நடத்துகின்றன. சலுகைகள் அற்ற, சமூக பாது காப்பற்ற பணிகளில் ஒன்றாகத் தான் துப்புர வுப் பணி இன்றைக்கும் இருக்கிறது. சாதிய- வர்க்க படிநிலைகளின் விளிம்பில் உள்ள வர்கள் இத்தொழிலாளிகள். சமூகத்தில் சமூக-பொருளாதார, அரசியல் பங்களிப்பில் அதிகாரமற்றவர்கள். புறக்கணிப்பின் வலியை புன்னகையோடு எதிர்கொள்ளும் இத்தொழி லாளிகள் சமூக விலக்கத்தில் நூற்றாண்டுகளாக நிறுத்தப்பட்டவர்கள்.
யார் இவர்கள்?
விசில் சத்தம் கேட்டவுடனே ‘குப்பகாரங்க’ என அழைக்கப்படுபவர்கள். இச்சமூகம் மீண்டும் ஒருமுறை திரும்பிக் கூட பார்க்காத சாக்கடை ஓரத்திலும்/ சாக்கடைக்குள்ளும் அரைக்கால் சட்டை போட்டபடி பணிசெய்பவர்கள். தெருவில், சாலைகளில் கடக்கும் ‘மாநகராட்சி தூய்மைப் பணி’ என்னும் வாகனத்தை கண்டவுடன் அனிச்சையாக மூக்கை மூடிக் கொண்டு செல்லும் நம் அன்றாட வாழ்வின் இயக்கத்தில் மிக முக்கியப் பங்காற்றும் சக மனிதர்கள்.
இந்தியாவில் 50 லட்சம் பேர் துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இவர்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிக ஆபத்தான சூழலில் பணிபுரிகின்றனர் என்கிறது துப்புரவு பணியாளர் பற்றிய தல்பெர்க் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை துப்புரவு பணியாளர்களை கீழ்க்கண்ட வகைகளில் பட்டிய லிடுகிறது. குறிப்பாக, இந்தியாவில் பணிபுரி வோர் எண்ணிக்கையும் எவ்வளவு என கணக்கிட்டுள்ளது துப்புரவு பணியாளர் ஆய்வறிக்கை (2019).
- சாக்கடை மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு எடுத்தல் (1,53,000 ஆண் பணியாளர்கள்)
- கழிப்பிடத்தை தூய்மை செய்தல் (7,70,000 பணியாளர்கள் இவர்களில் 95% பெண் பணியாளர்கள்)
- செப்டிக் டேங்க் அடைப்பு எடுத்தல் (22,000 ஆண் பணியாளர்கள்)
- ரயில் பாதை மற்றும் பிளாட்பார்ம்களில் சுத்தம் செய்தல் (95,000 பணியாளர்கள் இவர்களில் 80% பெண் பணியாளர்கள்)
- கழிவு சுத்திகரிப்பு ஆலைகளில் பணிபுரி வோர் (6,000 பணியாளர்கள்)
- பொதுக் கழிப்பிடங்களை சுத்தம் செய்தல் (2,02,000 பணியாளர்கள் இவர்களில் 75% பெண் பணியாளர்கள்)
- பள்ளி/ அலுவலகங்கள்/ மருத்துவமனை கள்/ வீடுகள் ஆகிய இடங்களில் கழிப்பிடங்க ளை சுத்தம் செய்தல் மற்றும் தூய்மைப் பணி (8,00,000 பணியாளர்கள் இவர்களில் 90% பெண் பணியாளர்கள்)
- சாக்கடை மற்றும் அதன் ஓரங்களில் சுத்தம் செய்தல் (4,10,000 பணியாளர்கள்)
- பொது இடங்களில் குப்பைகளை சுத்தம் செய்வது மற்றும் தெருக்களில் குப்பை அள்ளுவது, வீடுகளில் குப்பைகளை சேக ரிப்பது மற்றும் வாகனங்களின் மூலமாக குப்பைக் கிடங்களுக்கு எடுத்து செல்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவோர் (20 லட்சம் பணியாளர்கள்)
இப்பட்டியல் இன்றைய காலத்தில் (கொரோ னா காலத்தில்) இன்னும் நீளலாம். இங்கு நாம் மேலும் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், தூய்மை / துப்புரவு பணி என்னும் போர்வையில் இத்தொழிலாளர்கள் மறைமுக மாகவும் சில சமயங்களில் நேரிடையாகவும் கூட மலம் மற்றும் அது சார்ந்த அசுத்தங்களை கையாளுகிறார்கள். அவ்வகையில் பார்த்தால், இவர்களில் பலரும் மலம் அள்ளும் தொழிலா ளர்கள் வரையறைக்குள்ளும் அணுகப்பட வேண்டியவர்களே. ஆனால், ஒப்பந்தப் பணி அல்லது நிரந்தரப் பணி என்ற லாப விகித முத லாளித்துவ சேமநல அரசுகளுக்கு இவ்வகை கள் எல்லாம் தேவையற்ற விவகாரம்.
இந்தியாவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 1500 – 2000 துப்புரவு பணியாளர்கள் கடுமை யான நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாகி மர ணிக்கிறார்கள் என்று கடந்த ஆண்டுகளிலேயே உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இதனை இந்திய அரசு மறுக்கிறதே தவிர, பரிசீலனைக்கும் ஆராய்ச்சிக் கும் உட்படுத்தவில்லை. துப்புரவுப் பணியில் 60% அளவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களா கவே அரசுகள் பணியில் அமர்த்துகின்றன. ஆக, அவர்களின் சுகாதாரத்திற்கு, மருத்து வத்திற்கென்று அரசு எந்தவித உத்தரவாதமும் அளிப்பதில்லை.
உண்மையில் எப்படி இருக்கிறார்கள் இவர்கள்?
தனி மனித சுகாதாரம் குறித்த விவாதத்தில் உடல்-மன நலன் சார்ந்த அம்சங்கள் எப்படி இடம் பெறுகிறதோ அப்படி பொது சமூகத்தில் துப்புரவு மேலாண்மையும் அது சார்ந்த சமூக தொடர்பும் தவிர்க்க இயலாதவை. அதில் பணி செய்யும் இடம் மற்றும் வாழிடத்தின் சுகா தாரம் அவசியமாகிறது. அந்த சங்கிலியில் முக்கிய கண்ணியான துப்புரவு பணியளர்க ளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கூட முறை யாக வழங்கப்படுவதில்லை. கையுறை, கிருமி கள் தொற்றாத வகையில் ஜாக்கெட்டுகள் (மேலுடை), கால்களுக்கான பூட்ஸ், முகக்கவ சம், தலைக் கவசம் என இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய எந்த உபகரணங்க ளும் தேவைக்கு ஏற்ப முறையாக வழங்கப்படுவ தில்லை. மேலும் பயன்படுத்த தகுந்த முறையில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்படு வதும் இல்லை. இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பாரபட்சம் வேறு கடை பிடிக்கப்படுகிறது. பணி செய்யும் இடத்தில் துப்புரவு பணியாளர்களின் தனி சுகாதாரம் இப்படியாகத்தான் உள்ளது என்பது கள ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணியாளர்களின் வாழ்விடம் பெரும்பாலும் சாதிய சமூகத்தோடு தொடர்பு டையது. தமிழகத்தின் 12 மாநகராட்சிகளிலும் (சென்னை தவிர்த்து) 90% பணியாளர்கள் பட்டியலினத்தவர்களாக இருப்பதால், சேரி, காலனி அல்லது ஊருக்கு புறத்தில் ஒரு இடத்தில் தனியாக அடையாளப்படுத்தப்பட்ட குடியிருப்பு களாகத்தான் இவர்கள் வாழ்விடம் உள்ளது. அதிலும் கூரை வீடுகள், அட்டை/ஓடு வேய்ந்த வீடு மற்றும் ஒரு அறை வீடு (அ) பற்றாக் குறை/ தடுப்பு அறைகள் உள்ள வீடு என நெருக்கடிக்குள் சிக்கிய வாழிடமாகத் தான் இருக்கிறது. அதிலும் வீட்டில் கழிப்பறை வசதியில்லாமலும் இருக்கிறது. சம்பள பாக்கி மற்றும் குறைந்த வருமானம் ஆகியவற்றால் மருத்துவ செலவுகளுக்கென கடன் வாங்கி கடனாளியான தொழிலாளர்களும் உண்டு. தோல் வியாதி, மெனிஞ்சைடிஸ், மலேரியா, டெங்கு, காசநோய் ஆகிய நோய்களால் தனது பணிக்காலத்தில் பாதிக்கப்படாத துப்புரவு தொழிலாளிகள் வெறும் 1% மட்டுமே என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.
கொரோனாவிலும் தீராத சமூக ‘விலகல்’
மகாராஷ்டிராவில் 37,000 துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படாததால். முதலில் இருவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று பின்பு 53 பணியா ளர்களை பாதித்தது. தமிழகத்தில், அரியலூ ரில் கொரோனா பாதிப்படைந்த 2 துப்புரவு தொழிலாளிகளுக்கு முதல் இரண்டு நாட்கள் தாமதித்து பின்னரே சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.
நாடாளுமன்ற வாளாகம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைகளில் ஏதேனும் ஒரு துப்புரவு பணியாளருக்கு தொற்று ஏற்பட்டால் அதனால் அமைச்சர்களுக்கு பரவுமோ அல்லது ஆட்சி அதிகார பீடத்தில் உள்ளவர்களுக்கு பாதிக்குமோ என்ற கவலையில் அதனை செய்தியாக்கும் ஊடகங்களில் அரியலூர் சம்பவங்கள் போன்றவை பதியப்படுவதும் குறைவுதான். அதனால்தான் நாடு முழுவதுமே துப்புரவு பணியாளர்கள் எவ்வளவு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது உயிரிழந்திருக்கிறார்கள் என அறிய முடியவில்லை. என்றாலும், இயல்பாகவே ஊட்டச்சத்துள்ள உணவும்; நல்ல ஆரோக்கிய மான வாழிடமும்; பாதுகாப்பான பணியிடமும் வாய்க்கப் பெறாத, சமூகத்தின் விளிம்பில் உள்ள இத்தொழிலாளிகள் நோய் தொற்று களுக்கு எளிதில் இரையாகிறார்கள் அல்லது இரையாக்கப்படுகிறார்கள்.
சமூக இடைவெளி குறித்து பல வடிவங்க ளில் வகுப்பெடுக்கும் இதே தமிழக அரசு தான், சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான துப்புரவு தொழிலாளிக ளை ஒரே பேருந்தில், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அடைத்து அழைத்துச் சென்றது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை யில் 2 மாத காலமாக ஊதியம் வழங்காததால் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்த துப்புரவு பணியா ளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அதே தொழிலாளிகள்தான் கொரோ னா காலத்தில் பணிக்கு திரும்பிய மனித நேயர்கள்.
அரசியல் நாடகத்தில் கால்களை கழுவிச் சென்ற திருவாளர் மோடியின் மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் துப்புரவுத் துறையின் மேலாண்மைக்காக 545 கோடியிலிருந்து 5 கோடி அளவிற்கு நிதியை வெட்டியதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. முரணாக, 50,000 கோடி ரூபாயை “தூய்மை இந்தியா” திட்டத்திற்காக ஒதுக்கியதும் அதனாலும் “தூய்மை நகரங்கள்” என்ற பெயரில் துப்புரவுப் பணியாளர்களின் பணி நேரமும் பணிச்சுமை யும் கூடுதலானதும்தான் பரிசு. இந்தியாவில் 25 – 40 வயதிற்குட்பட்ட இளம்தொழிலாளிகள் பெரும்பாலானோர் இத்தொழிலோடு இணைந்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு 3-வது நாளிலும் ஒரு துப்புரவு தொழிலாளி மரணிப்பதும் தொடர்கிறது கண்ணுக்குத் தெரி யாத உழைப்புச் சக்தி (Invisible Work Force) எனப்படும் விளிம்புநிலையில் உள்ள, சமூக அங்கீகாரத்தில் புறக்கணிக்கப்பட்ட இத்தொழிலாளர்கள் குறித்த அரசுகளின் மெய்யான அக்கறை இது தான்.
என்ன செய்யலாம்?
ஒருபுறம் கால்களைக் கழுவி இத்தொழிலை புனிதப்படுத்தயும் மறுபுறம் தீண்டாமையின் தீண்டுதலும் தொடரும் சமூகத்தில் ‘என் மலத்தையும் என் அசுத்தத்தையும் சுத்தம் செய்ய படைக்கப்பட்டவன் நீ’ என்னும் பொது சாதி மனநிலையோடு ஆழமான விவாதமும் அறிவியல் ஆய்வுகளுமே இன்றைய உடனடித் தேவை.
அதோடு பாதுகாப்பு உபகரணங்களை உத்திரவாதப்படுத்த வேண்டும். உலக நாடு களில் எல்லாம் துப்புரவும் சமூக சுகாதார மும் சேர்த்த ஆய்வுகளும் அதற்கான தொழில் நுட்பங்களும் வளர்த்தெடுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மத்திய அரசு செய்யும் நிதி வெட்டும், அறிவியல் புறக்கணிப்பும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. தொழில்நுட்ப அளவில் ரோபோடிக் டெக்னாலஜி வரைக்கும் திட்டமிட்டு ஆய்வுகள் முன்னேறவும்; துப்புரவுப் பணியாளர்கள் பயன்பெறவும் நிதிகளை ஒதுக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒப்பந்த தொழிலாளிகள் என்று உழைப்பை உறிஞ்சும் ‘யாதும் தொழிலே எல்லாம் லாபமே’ என்ற முதலாளித்துவ கொள்கையில் மாற்றம் வேண்டும். வலுவான சட்ட வரைவுகளும் அதற்கான தீவிர கண்காணிப்பு முறைகளும் தாமதமின்றி அமலாக்கப்பட வேண்டும். போராட்ட வாழ்வில் தன்னையே கருவியாக்கி உழைக்கும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் அரசு வெறுமனே கைகளை தட்டாமல் கை கொடுத்து காக்க வேண்டும். அதுவே மக்க ளுக்கான அரசு உண்மையில் செய்ய வேண்டி யதாகும்.