tamilnadu

img

ஆட்டோக்களை இயக்க அனுமதித்திடுக

- ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவை, மே. 16 –  ஆட்டோக்கள் இயங்காமல் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கோவை மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங் குகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் வேன், டேக்சி போன்றவற்றை இயக்க அரசு தடை விதித்தது. இதில் பயணிகளின் ஓரிரு வாடகையை நம்பி இயங்கும் ஆட்டோக் கள் இயங்காததால் இதனை நம்பிய தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், அரசு நல வாரியம் மூலமாக வழங்கிய ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெரும்பாலான ஆட்டோ தொழிலாளர்களுக்கு கிடைக்கப் பெற வில்லை. சுமார் 300க்கும் குறைவான வர்களுக்கே இந்த நிவாரணம் கிடைத் துள்ளது. இதனையடுத்து சனியன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த அனைத்து ஆட்டோ கூட்டுக் கமிட்டி தலைவரும், சிஐடியு ஆட்டோ சங்க பொதுச்செயலாளருமான பி.கே.சுகு மாறன் கூறுகையில், இந்த ஊரடங்கு காலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் மற் றும் அவர்களின் குடும்பங்கள் துயரத்தை சந்தித்து வருகின்றனர். வருகிற திங்கள் முதல் ஆட்டோக்களை இயக்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். மேலும் நல வாரியத்தில் பதிவு செய்த, பதிவு செய்யாத என அனைவருக்கும் ரூ.5000 நிவாரணத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக இயங் கும் ஆட்டோக்களை மறித்து காவல்துறை யினர் அபராதம் விதிப்பது போன்ற நட வடிக்கைகளை கைவிட வேண்டும் என மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு பி.கே.சுகுமாறன் தலை மையில் ஏடிபி ஆட்டோ சங்க தலைவர் அன்சார் பாசா, கூட்டுக்கமிட்டி செயலா ளரும் எல்பிஎப் தலைவருமான வணங் காமுடி, சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் இர.செல்வம், ஏஐடியுசி கார்த்தி, எஸ்டிடியு சாஷகான், எப்ஐடியு மோகன்ராஜ் உள் ளிட்ட கூட்டுக்கமிட்டி தலைவர்கள் ஆட் சியரை சந்தித்து மனுக்களை அளித்தனர்.