tamilnadu

இலவச மின்சாரம் ரத்தானால் 21 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம்

சென்னை, மே 18- விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை அடுத்த ஆண்டு  மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி யுள்ளது. குறைந்தது இந்த ஆண்டு  டிசம்பர் மாதத்திற்குள் ஒரு மாவட்டத்தி லாவது செயல்படுத்த வேண்டும் என்றும்  அறிவித்துள்ளது. மத்திய புதிய மின்சார சட்டம் நடை முறைக்கு வந்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குடி சைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங் கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சா ரம், நெசவாளர் உள்ளிட்ட சில தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஆகியவை ரத்து செய்யப்படும். இந்த திட்டங்கள் தொடர வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால், மின்சா ரத்திற்கான மானியத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தலாம். தமிழ் நாட்டில் 21 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் திட்டம் மூலம் பயன்பெற்று வரும்  நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு விவ சாயிகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.