திண்டுக்கல், மே 13- அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதனன்று மாநகராட்சி அலு வலகம் முன்பாக வயிற்றில் ஈரத் துணியை கட்டி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.ஆர். பாலாஜி, மாவட்ட தலைவர் விஷ்ணு வர்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.