tamilnadu

img

குரூப்-4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிவிக்கத் தயங்கும் பணியாளர் தேர்வாணையம்....

பழனி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4- தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால் தேர்வர்கள் அச்சத் தில் உள்ளனர்.

தொகுதி-4 தேர்வை குறைந்தது 15 முதல் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதை ஒரு மெகா தேர்வு என்றே கூறலாம். இந்தத் தேர்விற்கு பழைய பாடத்திட்டம் தொடருமா? அல்லது புதியபாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுமா என்பதை இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெளிவுபடுத்தவில்லை. பாடத்திட் டத்தை தெளிவுபடுத்தினால் மட்டுமே தேர்விற்கு எளிதில் தயாராக முடியும். தொகுதி-2-க்கான தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படுமென பிப்ரவரி மாதமே தேர்வாணையம் அறிவித்து விட்டது. அப்படியிருக்கையில் தொகுதி-4-க்கான தேர்வு பாடத்திட்டம் குறித்துதேர்வாணையம் மௌனம் சாதிக்கிறது. பழைய முறையில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஒரு தாளாகவும், பொது அறிவு ஒரு தாளாகவும் இருந்தது. இனி பொதுத் தமிழ் அல்லதுபொது ஆங்கிலப் பாடம் தொடருமா?அல்லது நீக்கப்படுமா? புதிய பாடத்திட்டம் என்ன? என்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இது தொடர்பான முடிவை தேர்வாணையம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.தொகுதி-1 மற்றும் தொகுதி-2 தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிவித்ததுபோல் தொகுதி-4-க்கான பாடத்திட்டத் தையும் அறிவிக்கவேண்டும்.இந்தக் கோரிக்கையை பழனி ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மைய இயக்குநர் பி.ராமமூர்த்தி எழுப்பியுள்ளார்.