திண்டுக்கல், ஜூன் 25- கொரோனா காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழ கம் முழுவதும் உள்ள வீடு, கடை கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் மின் கணக்கீடு செய்யாமல் இருந்தது. தற்போது மின் கணக் கீடு பணி நடைபெற்று மின்கட்ட ணம் வசூலிக்கப்படு கிறது. ஊர டங்கு காலத்தில் மக்கள் வேலை யின்றி தவிக்கும் போது நான்கு மாத மின் கணக்கீட்டில் குளறுபடி கள் செய்து மின் கட்டண கொள் ளையில் ஈடுபட்டு வரும் மின்வாரி யம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழ னன்று திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு உதவி மின்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, நகர் செயலாளர் பி.ஆஸாத், மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஜானகி, சி.பாலச்சந்திரபோஸ், மாணிக் கம், மின்வாரிய மத்திய அமைப் பின் மாவட்டச் செயலாளர் உமா பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.