tamilnadu

திண்டுக்கல்லில் கொரோனா சமூகப் பரவலாகிவிட்டது ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேட்டி

திண்டுக்கல், ஜூலை 2- கொரோனாவை வைத்து அதிமுக அரசு அரசியல் செய்து கொண்டிருக்கிறது யார் என்ன அறிவுரை கூறினாலும் அதனை முதல் வர் கேட்க தயாராக இல்லை திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். திண்டுக்கல்லில் அவர் வியாழனன்று அளித்த பேட்டி:- திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புறங்க ளில் பரவி வந்த கொரோனா தற்பொழுது கிராமப்புறங்களில் பரவத் தொடங்கி யுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் சமூகப் பரவலாக கொரோனா மாறியுள்ளது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் அளவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதற்கு முழுக்காரணம் தமிழக அரசு தான். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விவ காரத்தில் அரசு தோற்றுவிட்டது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சர்கள் மூன்று மாத காலமாக வெளியே வரவில்லை. அறிக்கைகள் தான் கொடுத்துக் கொண்டி ருந்தார்கள். கொரோனாவை வைத்து அதி முக அரசு அரசியல் செய்து கொண்டிருக்கி றது. கொரோனா தொடர்பாக யார் அறிவுரை சொன்னாலும் அதைக் கேட்பதற்கு தமி ழக முதல்வர் தயாராக இல்லை. மாநில உரி மைகளை மத்திய அரசிடம் அதிமுக அரசு பறிகொடுத்து வருகிறது. இந்த அரசு எதற் கும் லாயக்கற்ற அரசு என்றார்.