tamilnadu

நேரடிக்கல்வி முறையில்தான் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

சின்னாளபட்டி, ஜூன் 28- காணொலிக் கல்வி முறை நேரடிக்கல்வியின் சிறப்பை பூர்த்தி செய்ய முடியாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நேரடிக்கல்வி முறையில் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக் கின்றனர் என்பதை தெலுங்கானா ஆளுநர் ஒப்புக் கொண்டார்.  காந்திகிராம கிராமிய பல்க லைக்கழகத்தின் மேலாண்மை புலம் சார்பில் பன்னாட்டு காணொலி கருத்தரங்கை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் துவக்கி வைத்த்தார். அப்போது அவர் பேசியதா வது: கொரோனா தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் மட்டுமல் லாது, சுகாதராம், கல்வித்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வியியல் வல்லுநர்கள் காணொ லிக் கல்வி முறை நேரடிக்கல்வி யின் சிறப்பை பூர்த்தி செய்ய முடி யாது என்று கருதுகின்றனர். பொதுவாக நேரடிக்கல்வி முறை யில் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச் சியாக இருக்கின்றனர். மாணவர்களின் மனநிலை நாளுக்கு நாள் மாறுபடுகிறது. தேர்வு முறையாலும் மாணவர் களின் மனநிலை மாறுபடுகிறது.

1990-ஆம் ஆண்டுகனில் ‘எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க லாம்’ எனக் கேட்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டுகளில் அது அல்லது இது என்று கேள்விகள் கேட்கப்பட்டன. 2010-ஆம் ஆண்டுகளில் கேள்வித் தாள் முறையில் மாணவர்கள் விருப்ப்பட்ட கேள்விகளுக்கு மட் டும் விடையளிக்கலாம் என்ற நிலையிருந்தது. 2020-ஆம் ஆண் டில் மாணவர்கள் தேர்வுக்கு வந் தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு மாறியுள்ளது.  கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலை பற்றிய ஆய்வு மற்றும் புள்ளி விபரம் சேகரித்த லில் உயர் கல்வி நிறுவனங்கள் ஈடுபட வேண்டும். மேலும் கல்வி யில் சமூக பொறுப்பு உயர் கல்வி நிறுவனங்களுக்கு இருப்பது நல் லது. கொரோனா சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் உயர் கல்வியா ளர்கள் ஈடுபடலாம் என்றார். மேலும் அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி டிஜிட் டல் இந்தியாவை உருவாக்குவ தற்கான வசதிகளையும் புதிய திட்டங்களையும் மேற்கொண் டுள்ளார். இளைஞர்கள், படித்த வர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்கு டிஜிட்டல் மயம் உதவியாக உள்ளது என்றும் கூறி னார்.

 கேரள பல்கலைக்கழக மேலா ண்மை துறையின் முதல்வர் டாக் டர் சந்திரசேகரன், தன்னுடைய உரையில் வேலைவாய்ப்பின் செயல் பாடு, மேலாண்மை கல்வியின் தரம் குறித்து விளக்கினார்.  சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் பொருளியல் துறையின் தலைவர் திருநாவுக்கரசு கொரோ னாவால் பள்ளிக் கல்விக்கு அடுத் துள்ள தொழிற்கல்வி, விவசா யக்கல்வி, மருத்துவம், இதர கலை அறிவியல் கல்வியின் பாதிப்பை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து சிறப்புரை யாற்றினார். துவக்கவிழா நிகழ்வில் எம். சுந்தரவடிவேலு வரவேற்புரை யாற்றினார். கருத்தரங்கு ஒருங்கி ணைப்பாளர் - மேலாண்மை புலத் துறையின் முதல்வர் எம். சௌந்த ரபாண்டியன் கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார். பதி வாளர் வி.பி.ஏ. சிவக்குமார் நன்றி கூறினார்.