திண்டுக்கல், மே. 31- தமிழக கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகை யில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க தனிப்பட்ட கலை ஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5,000 வீதம் 500 கலைஞர்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றிற்கும் ரூ.10,000 வீதம் 100 கலைக்குழுக்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி பெற தனிப்பட்ட கலை ஞரின் வயது 31.03.2020 அன்னறைய தேதி யில் 16 வயதிற்கு மேற்பட்டவராகவும், 30 வய திற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கலைக்குழுக்கள் தங்களது கலை நிறு வனத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
உறுப்பினர் - செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை – 600 028. என்ற முகவரியில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும் பும் கலைஞர்கள், கலைக்குழுக்கள் சுய முகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான தபால்தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர் - செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு வரும் 30.06. 2020 மாலை 5.45 மணிக்குள் வந்தடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களை 044-24937471 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி,; தெரி வித்துள்ளார்.