தருமபுரி, பிப். 5- பாலக்கோடு அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலி பரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள திருமல்வாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவ ரின் 17 வயது மகள் அங் குள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். கடந்த பிப். 1ஆம் தேதியன்று கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற அம்மாணவி வீடு திரும்பவில்லை. இத னால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரனையில், அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (27) என்ப வர் மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பள்ளி மாணவியை கடத்தி திரு மணம் செய்த செல்வக் குமாரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.