tamilnadu

img

மலைவாழ் மக்கள் நிலத்தை மாற்றுத் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தக் கூடாது - மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்

பென்னாகரம், ஆக. 1- மலைவாழ் மக்கள் வாழ்விட நிலங்களை மாற்றுத் திட்டங் களுக்காகக் கையகப்படுத்தக் கூடாது என மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு கண்டனம் தெரிவித் துள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் வட்டம், ஒகேனக்கல் அடுத்த ஒட்ட மலை கிராமத்தில் சுமார் 36-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் வசிக்கும் இடத்தில் ஊராட்சிகளிலிருந்து எடுக்கப்படும் குப்பைகளை கொட்ட அவ்விடத்தை உடனடி யாக காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்தி னர் மலைவாழ் மக்களை தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். இந்நிலையில், சனியன்று அப்பகுதி யில் மலைவாழ் மக்கள் சங்கக் கொடி யினை ஏற்றி வைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பி.டில்லி பாபு பேசுகையில் தெரிவித்துள்ள தாவது,

மலைவாழ் மக்கள் வாழும் இடத்தை மாற்றுத் திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. மலைவாழ் மக்களுக்கு அவ்விடத்தில் பட்டா  வழங்க வேண்டும். அடிப்படை வசதி களை அரசாங்கம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். இத்த கைய கோரிக்கைகளை நிறை வேற்றப்படாத பட்சத்தில் மலை வாழ் மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.  இந்நிகழ்விற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தரு மபுரி மாவட்டச் செயலாளர் கே.மல் லையன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் சோலை அர்ஜு னன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், பென்னாக ரம் பகுதிக் குழு செயலாளர் கே. அன்பு, மாவட்டக்குழு உறுப்பினர் கள் ரவி, சிவா,  பகுதிக்குழு உறுப்பி னர்கள் ஜீவானந்தம், மாரிமுத்து, முனிராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.