தருமபுரி, ஜூன் 22- ஜடையம்பட்டி அருந்ததிய மக்க ளுக்கு மகாத்மா காந்தி நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனுகொடுக்கும் போராட்டம் திங்க ளன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையம்பட்டி கிராமத்தில் 200க் கும் மேற்பட்ட அருந்ததிய குடும் பங்கள் வசித்து வருகின்றனர். நில மற்ற விவசாய கூலி தொழிலாளர் களாகிய இவர்கள் நூறுநாள் வேலையும், கூலிவேலையும் செய்து பிழைப்பு நடத்தி வருகின்ற னர். இந்நிலையில் தற்போது நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை யில்லாமலும் விவசாய கூலி வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், தற்போதுள்ள கொரோனா பொதுமுடக்கத்தால் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. எனவே இம்மக்களுக்கு மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதிதிட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும். புதிய தாக வேலைக்கான அட்டை வழங்க வேண்டும். கொரோனா நிவாண மாக குடும்பத்துக்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்கவேண்டும். மேலும் இக்கிராமத்துக்கு குடிநீர், தெரு விளக்கு, அரசு தொகுப்பு வீடு உள் ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டப் பொருளாளர் இ.கே.முருகன், ஒன்றிய செயலாளர் ராமன், ஒன்றிய தலைவர் கர்ணல், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.தங்கராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சி.வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.