tamilnadu

மகன் இறப்புக்கு நடவடிக்கை எடுக்காத காவல்துறை ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

தருமபுரி, ஜூன் 15- மகன் இறப்புக்கு தொடர்பாக காவல்துறை நட வடிக்கை எடுக்க மறுப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்பட்டி வட்டம் பொம்மிடி நடூர் கிராம அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது கணவர் 10, ஆண்டுக ளுக்கு முன் இறந்துவிட்டார். கூலி வேலை செய்து வரும் இவருக்கு வசந்த்குமார் (20) என்ற மகன் உள் ளார். இவர் அரசு போட்டிதேர்வு எழுதுவதற்காக பொம்மிடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் 2019 அக்டோபர் 6ஆம் தேதி தங்கும் விடுதியில் தூக்கிட்டு இறந்துவிட்டதாக தக வல் வந்துள்ளது. இதனையடுத்து என் மகன் இறப்பில் மர்மம் உள்ளதாக தெரிவித்த ராஜாமணி பொம்மிடி நடூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித் தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை யினர் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். ஆனால், இவ்வழக்கு குறித்து தற்போது எந்த விசா ரணையும் மேற்கொள்ளவில்லை.ஆகவே,  என்மகன் கொலைக்கு காரணமானவர்களை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கைது செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனமனுவில் அளித்தார்.