தருமபுரி, ஏப்.12-தலித் மற்றும் அருந்ததிய மக்களுக்கு அடிப்படை வசதிகிடைத்திட திமுக வேட்பாளர்களை ஆதரிப்பீர் என தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு வாக்குகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரூர் தொகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில், தலித் மற்றும் அருந்ததிய மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா, அரசு தொகுப்புவீடு, சமூதாயகூடம், நூலகம், சுகாதார வளாகம், குடிநீர், சாலை வசதி, சுடுகாட்டு வசதி, குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், உயர்கல்வி பயிற்சி வகுப்பு, தேர்வுக்கு பயிற்சி மையம் ஆகியவற்றை பெற்றுத்தர திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஏ.குமார், ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா,மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.வி.மாது, சி.வேலாயுதம், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கே.என்.ஏழுமலை, எஸ்.கே.கோவிந்தன், ஆறுமுகம், ராமு மற்றும் நிஷிரூதின் ஆகியோர் பங்கேற்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.