tamilnadu

தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி இரு குழந்தைகள் பலி

தருமபுரி, மே 30-நல்லம்பள்ளி அருகேயுள்ள கோபால்பட்டி ஏரியில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள கோபால்பட்டி ஏரிக்கு கோடை மழையால் தண்ணீர் வந்துள்ளது. நல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாக்கியம் என்பவர் அருகில் உள்ள கோபால்பட்டி ஏரியில் ஆடு மேய்த்து கொண்டிருந்துள்ளார்.  அப்பொழுது  கோடை விடுமுறைக்காக பாக்கியம் வீட்டுக்கு வந்த இளம்பிள்ளையை சேர்ந்த சக்திவேல் மகள் கார்த்திகா (10)  மற்றும் நல்லம்பள்ளியை சேர்ந்த சிவா மகன் கோகுல் (6)ஆகிய இருவரும் பாட்டியுடன் ஏரிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளனர். அப்போது கார்த்திகா, கோகுல் ஆகிய இருவரும் அருகிலுள்ள ஏரியில் குளித்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக சிறுவன் கோகுல் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். இதைகண்ட கார்த்திகாசிறுவனை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக சிறுமியும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட சிறுமி ஒருவர் கிராமத்தில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  ஏரியில் தேடியதில் கார்த்திகா, கோகுல் ஆகிய இருவரையும் ஏரி தண்ணீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து, அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தைகள் கோகுல் மற்றும் கார்த்திகா இருவரும்  நல்லம்பள்ளி அருகே ஏரியில்உள்ள தண்ணீரில் மூழ்கி   உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.