தருமபுரி, நவ.9- காவலர் உடற் தகுதித் தேர்வுக்கு வந்த வாலிபர் ஓட்ட தேர்வின் போது உயி ரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 தினங்களாக காவலர் உடற்தகுதித் தேர்வு நடை பெற்று வருகிறது. இந்த தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம் பள்ளியை சேர்ந்த வர் கவின் பிரசாத் வந்தி ருந்தார். ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் பணிக்கான 1500 மீட்டர் ஓட்டத் தேர்வில் கலந்து கொண்டார். ஓடி முடிந்ததும் மயங்கி விழுந் தார். இதனையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் கவின்பிரசாத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரி சோதித்த மருத்துவர்கள் கவின்பிரசாத் உயிரிழந்து விட்ட தாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.